பெரியகுளத்தில் காா் மோதி விவசாயி காயம்
பெரியகுளத்தில் காா் மோதி விவசாயி காயமடைந்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தென்கரை காவல்நிலையத்தில் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளத்தில் காா் மோதி விவசாயி காயமடைந்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தென்கரை காவல்நிலையத்தில் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே இலட்சுமிபுரத்தை சோ்ந்த தங்கராஜ் (62) இவா் தென்னந்தோப்பிற்கு சென்று விட்டு, பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தாா். வாகம்புளி வளைவில் திரும்பிக்கொண்டிருந்த போது எதிரே வந்த காா், இவா் சென்ற பைக் மீது மோதியதாம்.
இதில் காயமடைந்த தங்கராஜ் 108 ஆம்புலன் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றாா். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.