FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழக நீர்வளத் துறை செயலர் மாற்றம்

தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை செயலாளர் திடீர் மாற்றம்...

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 9:34 pm IST
தமிழ்நாடு சட்டப்பேரவை - எக்ஸ்
பகிர்:

தமிழ்நாடு அரசின் புதிய நீர்வளத் துறை செயலாளராக பிரசாந்த் வடநரே நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை அவர் ஏற்கெனவே வகித்து வந்த ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறையையும் கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் ஆட்சி பொறுப்பேற்ற பின் நீர்வளத் துறை செயலாளராக சத்யபிரதா சாகு கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டிருந்தார்.

Advertisement

Advertisement

தற்போது அவர் இரண்டரை மாதத்திலேயே மாற்றப்பட்டு புதிய நீர்வளத் துறை செயலாளராக பிரசாந்த் வடநரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேசமயம், சத்யபிரதா சாகுவுக்கு எந்த பணியிடமும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Prashant Wadnere has been appointed as the Secretary of the Water Resources Department, Government of Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments