FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

சுருளி அருவியில் இன்று குளிக்க அனுமதி!

தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர்.

Updated On : 16 ஜூலை 2023, 10:43 am IST
ஞாயிற்றுக்கிழமை சுருளிஅருவியில் நீராடிய சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள்.
பகிர்:

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுருளி அருவியில் நீர்வரத்து ஏற்பட்டது. அதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் ஜூலை 10-இல் யானைக்கூட்டம் சுருளி அருவி அருகே உள்ள தேக்கங்காடு, வெண்ணியாறு பிரிவு பகுதியில் நடமாடியது. இந்த இரண்டு பகுதிகளும் சுருளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ளதால் ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் அருவியில் குளிக்க தடை விதித்தனர்.

Advertisement

Advertisement

சுமார் 6  நாட்களாக அந்த பகுதியில் நடமாடிய யானைகள் கூட்டமாக அருவியின் உள்பகுதிக்கு சென்றது. இதை ஞாயிற்றுக்கிழமை காலை உறுதி செய்ய வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து பின்னர் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை குளிக்க அனுமதியளித்ததால் மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர். வனத்துறை சார்பில் பேருந்து இயக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments