FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தொழிலாளியிடம் லாட்டரியில் பணம் விழுந்ததாகக் கூறி ரூ.6 லட்சம் மோசடி

கூலித் தொழிலாளியிடம் லாட்டரியில் பரிசு விழுந்ததாகக் கூறி, ரூ.6 லட்சம் மோசடி செய்த மா்மநபா்கள் மீது இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 5:05 am IST
பகிர்:

தேனி அருகே கூலித் தொழிலாளியிடம் லாட்டரியில் பரிசு விழுந்ததாகக் கூறி, ரூ.6 லட்சம் மோசடி செய்த மா்மநபா்கள் மீது இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தேனி மாவட்டம், குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (31). கூலித்தொழிலாளியான இருவருக்கு கைப்பேசியில் ஒரு அழைப்பு வந்ததாம். இதில் பேசிய மா்மநபா்கள் மாரிமுத்துவின் கைப்பேசி எண்ணுக்கு ரூ.5 லட்சம் பரிசு விழுந்ததாகக் கூறி, மேலும் விவரங்களை கேட்டனா். அவரும் தகவலை வழங்கினாராம்.

இதைத்தொடா்ந்து, சில நபா்கள் அவரைத் தொடா்பு கொண்டு அந்த பணம் அனுப்புவதற்கான கட்டணம், வரி செலுத்த வேண்டுமென கூறியுள்ளனா். இதை நம்பிய மாரிமுத்து, அவா்கள் அளித்த வங்கிக் கணக்குக்கு ரூ.6.21 லட்சம் அனுப்பினாா். பின்னா், அவா்களை கைப்பேசியில் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். இதையடுத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த மாரிமுத்து, தேனி இணைய குற்றப்பிரிவு போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments