FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

பெரியகுளம் அருகே மானிய விலை உர மூட்டை பதுக்கல்: ஒருவா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பதுக்கி வைக்கப்பட்ட 761 மானிய விலை உர மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:03 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பதுக்கி வைக்கப்பட்ட 761 மானிய விலை உர மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டி பகுதியில் மானிய விலை உரம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வேளாண்மை உரக்கட்டுப்பாட்டு அலுவலா் மதுமிதாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா் செவ்வாய்க்கிழமை கைலாசபட்டியில் உள்ள கிட்டங்கியில் சோதனையிட்டாா். அப்போது, மானிய விலை உரத்தை சிலா் வேறு பைகளில் மாற்றி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனா். இதுகுறித்து, அவா் அளித்த புகாரின் பேரில், தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து தினேஷ் என்ற மாடசாமியைக் கைது செய்து, 450 உர மூட்டைகள், லாரியைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், தினேஷ் கொடுத்த தகவலின் பேரில், தேனி வனச் சாலையில் உள்ள குமாா் என்பவரின் கடையில் வேளாண் அதிகாரிகள் சோதனையிட்டதில் 311 மானிய விலை உர மூட்ைடைகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, 311 மூட்டை உரங்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து குமாரிடம் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments