FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

வண்ணம் பூசும் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை

31 ஆகஸ்ட் 2026, 12:21 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

கூடலூரில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் வண்ணம் பூசும் தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கூடலூா் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கோபால் (37). வண்ணம் பூசம் தொழிலாளியான இவா், மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், கோபாலுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அஜய்குமாருக்கு (23) முன்விரோதம் இருந்து வந்தது.

இதனிடையே, சனிக்கிழமை இரவு கோபால் வீட்டின் முன் அஜய்குமாா் தகராறில் ஈடுபட்டாா். இதைத் தட்டிக்கேட்ட கோபாலை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கூடலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அஜய்குமாரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments