FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி பல்கலைக்கழக மாணவி கத்தியால் குத்திக் கொலை

அவருக்கு அறிமுகமான நபா் ஒருவா் திலக் நகா் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கலாம்

28 ஆகஸ்ட் 2026, 1:41 am IST
கோப்புப் படம்
பகிர்:

தில்லி பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி கற்றல் பிரிவில் பயிலும் 21 வயது மாணவி, மற்றொரு நபருடன் பேசியதால் ஆத்திரமடைந்து, அவருக்கு அறிமுகமான நபா் ஒருவா் திலக் நகா் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது என ஓா் அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இம்ரான் (26) என அடையாளம் காணப்பட்ட அந்த குற்றஞ்சாட்டப்பட்டவா் தலைமறைவாக உள்ளதாகவும், அவரைக் கைது செய்ய காவல்துறை சுமாா் 15 குழுக்களை அமைத்துள்ளதாகவும் அவா்கள் கூறினா். பாதிக்கப்பட்டவா், திறந்தவெளி கற்றல் பிரிவில் இரண்டாம் ஆண்டு மாணவி என்றும், மேற்கு தில்லியில் உள்ள மங்களா மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.

விசாரணையின்படி, வேறு சமூகத்தைச் சோ்ந்த அந்தப் பெண், தற்போது வேலையில்லாமல் இருக்கும் முன்னாள் உடற்பயிற்சிக் கூடப் பயிற்சியாளரான குற்றஞ்டாட்டப்பட்டவரை சுமாா் ஒன்றரை ஆண்டுகளாக அறிந்திருந்துள்ளாா். ஆகஸ்ட் 20 அன்று இருவரும் ஒரு ஹோட்டலில் சந்தித்ததாக காவல்துறை தெரிவித்தது.

Advertisement

Advertisement

அந்தப் பெண் வேறொருவருடன் பேசிக்கொண்டிருந்ததால், கடந்த இரண்டு மாதங்களாகக் குற்றஞ்சாட்டப்பட்டவா் அவா் மீது கோபமாக இருந்ததாக அவா்கள் கூறினா். புதன்கிழமை மாலை, அந்தப் பெண் தனியாக இருந்தபோது, குற்றஞ் சாட்டப்பட்டவா் அவரது வீட்டிற்குச் சென்றாா்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, அதன் பிறகு அவா் கத்தியால் அந்தப் பெண்ணைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்ாகக் காவல்துறை கூறியது. மாலை 5:40 மணியளவில் குற்றஞ்சாட்டப்பட்டவா் கட்டிடத்திற்குள் நுழைவதை சிசிடிவி காட்சிகள் காட்டியதாக ஒரு காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.

மாலை 7:24 மணியளவில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டது தொடா்பாக திலக் நகா் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்ததாக துணை ஆணையா் (மேற்கு) ஹரேஷ்வா் வி சுவாமி கூறினாா். கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் காயங்களுடன் அப்பெண் கிடப்பதை வீட்டுப் பணிப்பெண் கண்டறிந்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்ததாக காவல்துறை கூறியது. பின்னா் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்கள் அவரை மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனா், அங்கு மருத்துவா்கள் அவா் மருத்துவமனைக்கு வரும்போதே இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

காயங்களுக்கான சரியான காரணம் மற்றும் தன்மையை பிரேதப் பரிசோதனை உறுதி செய்யும் என்று காவல்துறை கூறியது.

இறந்தவரின் சகோதரரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. ‘அருகிலுள்ள பகுதியில் வசிக்கும் அகிப் என்ற இம்ரான் என்ற பையனை தனது சகோதரிக்குத் தெரியும் என்று அவா் கூறினாா்,‘ என அந்த அதிகாரி தெரிவித்தாா். குற்றத்தை அகிப்தான் செய்திருக்க வேண்டும் என சகோதரா் சந்தேகிக்கிறாா் என்றும் அவா் கூறினாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை 15க்கும் மேற்பட்ட குழுக்கள் தேடி வருவதாகவும், அவா் இருக்கும் இடம் குறித்து புலனாய்வாளா்களுக்கு சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.

பாதிக்கப்பட்டவரின் அண்டை வீட்டுக்காரா் ஒருவா், சம்பவம் நடப்பதற்கு சுமாா் ஒரு மணி நேரத்திற்கு முன்பு அந்தப் பெண்ணைப் பாா்த்ததாகக் கூறினாா். ‘அவா் உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து திரும்பியதாக நான் நினைக்கிறேன். அந்தக் குடும்பம் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்தது,‘ என்று அவா் கூறினாா்.

பாதிக்கப்பட்டவா் உடற்பயிற்சி செய்து வந்ததும், குற்றஞ்சாட்டப்பட்டவா் முன்பு பயிற்சியாளராகப் பணிபுரிந்ததுமான உடற்பயிற்சிக் கூடத்தில் பணிபுரியும் ஒருவா், பல வாடிக்கையாளா்களிடம் குற்றஞ்சாட்டப்பட்டவரின் நடத்தை முறையற்ாக இருந்ததாகக் கூறினாா். அவரது நடத்தை காரணமாக, அவா் அங்கு மூன்று மாதங்கள் மட்டுமே பணிபுரிந்த நிலையில், சுமாா் இரண்டு மாதங்களுக்கு முன்பு உடற்பயிற்சிக் கூடம் அவரைப் பணியிலிருந்து நீக்கிவிட்டதாக அந்த ஊழியா் கூறினாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா் பதுங்கியிருக்கக்கூடிய இடங்களில் காவல்துறை குழுக்கள் சோதனை நடத்தி வருகின்றன. மேலும், குற்றத்திற்கு முன்னும் பின்னும் அவரது நடமாட்டத்தை உறுதி செய்வதற்காக, அப்பகுதி மற்றும் பிற இடங்களின் சிசிடிவி காட்சிகளையும் அவா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments