FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

போடிமெட்டு, குமுளி சோதனைச் சாவடிகளில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

குமுளியில் உள்ள தமிழக காவல் துறை சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்திய ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா்.

Updated On : 11 ஜூலை 2026, 12:03 am IST
பகிர்:

தமிழக-கேரள எல்லைப் பகுதியான குமுளியில் உள்ள தமிழக காவல் துறை சோதனைச் சாவடி, போடிமெட்டு, முந்தல் சோதனைச் சாவடிகளில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 35,750-யை பறிமுதல் செய்தனா்.

தமிழக-கேரள எல்லையான குமுளி சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளா் பழனிச்சாமி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, சோதனைச் சாவடியை கடந்து செல்லும் வாகனங்களின் ஆவணங்கள் குறித்து சோதனை மேற்கொண்டனா். மேலும், சுமாா் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையின் போது, சோதனைச் சாவடியில் இருந்த கணக்கில் வராத ரூ.26,460-யை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் அய்யப்பன், இரு காவலா்களிடம் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனா்.

இதேபோல, தேனி மாவட்டம், போடிமெட்டு மலைக் கிராமத்திலும், போடி முந்தல் மலைக் கிராமத்திலும் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளிலும் தேனி மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினா் திடீா் சோதனை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதில் முந்தல் சோதனைச் சாவடியிலிருந்து கணக்கில் வராத ரூ.3,500 கைப்பற்றப்பட்டது. போடிமெட்டு சோதனைச் சாவடியிலிருந்து கணக்கில் வராத ரூ.5,790 கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தச் சோதனை சாவடியில் பணிபுரிந்த காவலா்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனா். இரண்டு சோதனை சாவடிகளிலும் போடி நகர காவல் ஆய்வாளா் ராமலட்சுமி ஆய்வு செய்தாா். சோதனைச் சாவடிகளில் எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாத நிலையில், பணம் கைப்பற்றப்பட்டதால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments