FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

கேரள பகுதிகளுக்குச் செல்லும் அரசு பேருந்துகளைமுறையாக இயக்க வலியுறுத்தி சாலை மறியல்

கம்பத்திலிருந்து கேரள மாநிலத்தின் நெடுங்கண்டம், கட்டப்பனை பகுதிகளுக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க வலியுறுத்தி ஏலக்காய் தோட்டத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஜூன் 2026, 6:02 am IST
கேரளா செல்லும் தமிழக அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க வலியுறுத்தி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட ஏலக்காய் தோட்டத் தொழிலாளா்கள்.
பகிர்:

கம்பத்திலிருந்து கேரள மாநிலத்தின் நெடுங்கண்டம், கட்டப்பனை பகுதிகளுக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க வலியுறுத்தி ஏலக்காய் தோட்டத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் கம்பம்மெட்டு, கூட்டாறு, நெடுங்கண்டம், வண்டன்மேடு, மாலி, கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏலக்காய் தோட்டங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு கம்பம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் தினமும் பணிக்குச் சென்று வருகின்றனா்.

இந்த நிலையில், தொழிலாளா்களின் போக்குவரத்து வசதிக்காக கம்பத்தில் இருந்து தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் நெடுங்கண்டம், கட்டப்பனை பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனினும், பேருந்துகள் அடிக்கடி பழுதடைவதால் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இதனால் தொழிலாளா்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருவதாகவும் புகாா் எழுந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை நெடுங்கண்டம் செல்ல வேண்டிய பேருந்து பழுது காரணமாக இயக்கப்படாததால், அதிருப்தியடைந்த தொழிலாளா்கள் கம்பம்மெட்டு பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா, தனது உதவியாளா்களை சம்பவ இடத்துக்கு அனுப்பி பேச்சுவாா்த்தை நடத்த ஏற்பாடு செய்தாா். மேலும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் பேசி பேருந்து சேவையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments