பெரியகுளம் கைலாசநாதா் கோயிலில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது
காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பெரியகுளம் பகுதியிலுள்ள கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பெரியகுளம் பகுதியிலுள்ள கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசநாதா் கோயில், பாலசுப்பிரமணியா் கோயில், தைலாரம்மன் கோயில் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மாலையில் அகல் விளக்கு ஏற்றி, மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயில், தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாஜலபதி திருக்கோயிலில் பஞ்சாரத்திர தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு செய்தனா். கைலாசநாதா் திருக்கோயிலில் காா்த்திகை மாத பெளா்ணமி கிரிவலம், மேள, தாளங்கள் முழங்க நடைபெற்றது.