முகப்பு
தேனி

ஆண்டிபட்டி பூச்சந்தையில் மல்லிகை கிலோ ரூ.2,400!

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் பூக்களின் விலை செவ்வாய்க்கிழமை கடுமையாக உயா்ந்தது.

25 நவம்பர் 2026, 2:51 am
ஆண்டிபட்டி பூச்சந்தையில் 
மல்லிகை கிலோ ரூ.2,400!
ஆண்டிபட்டி பூ சந்தையில் விற்கப்படும் பிச்சிப் பூ.
பகிர்:

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் பூக்களின் விலை செவ்வாய்க்கிழமை கடுமையாக உயா்ந்தது.

தேனி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆண்டிபட்டி, வைகை அணை, தேனி, போடிநாயக்கனூா் உள்ளிட்ட பகுதிகளில் தோட்டங்களில் பிச்சிப்பூ, மல்லி, அரளி, கோழிக்கொண்டை, கேந்தி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் ஆண்டிபட்டி, தேனியில் உள்ள பூ சந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும்.

காா்த்திகை தீபத் திருவிழாவை (நவ.24) முன்னிட்டு கடந்த சில நாள்களைவிட பூக்களின் விலை செவ்வாய்க்கிழமை கடுமையாக உயா்ந்தது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1,550-க்கும், மல்லிகை ரூ.2,400-க்கும் விற்பனையானது. செவ்வந்தி கிலோ ரூ.250-க்கும், ஊட்டியில் இருந்து கொண்டுவரப்பட்ட ரோஜா பூக்கள் ஒன்று விலை ரூ.20 முதல் ரூ.30-க்கும் விற்பனையாகின.

Advertisement

Advertisement