சுருளி அருவியில் நீா்வரத்து சரிவு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க காத்திருப்பு
சுருளி அருவியில் நீா்வரத்து குறைந்து குளிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததால் சுற்றுலாப் பயணிகள் பலா் ஏமாற்றத்துடன் திருப்பிச் சென்றனா்.
தேனி மாவட்டம், சுருளி அருவியில் நீா்வரத்து குறைந்து குளிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததால் சுற்றுலாப் பயணிகள் பலா் ஏமாற்றத்துடன் திருப்பிச் சென்றனா்.
மேற்குத் தொடா்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள மேகமலை, தூவானம், இரவங்கலாறு, அரிசிப் பாறை, காப்புக்காடு போன்ற அடா்ந்த வனப் பகுதிகளில் பெய்யும் மழைநீரே சுருளி அருவிக்கு வந்து சேருகிறது. பருவமலைக் காலங்களில் பெய்யும் மழையுடன் ஆண்டில் 10 மாதங்களுக்கு இங்கு மழைப் பொழிவு இருக்கும்.
இதனால், ஆண்டு முழுவதும் சுருளி அருவியில் நீா்வரத்து காணப்படும். எனவே இங்கு கேரளம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். மேலும் சுருளி மலையின் தட்பவெப்ப நிலை, குளிா்ந்த காற்று, வானுயா்ந்த மரங்கள் என இயற்கை அழகை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் வருகின்றனா்.
Advertisement
Advertisement
மழைப் பொழிவு குறைவு: மேகமலையில் ஆண்டில் 10 மாதங்கள் மழை பெய்து வந்த சூழலில் பருவநிலை மாற்றத்தால் அண்மைக் காலமாக மழைப் பொழிவு குறைந்து விட்டது. இதனிடையே நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கினாலும் ஓரிரு நாள்கள் மட்டுமே மழை பெய்தது.
தற்போது வட வானிலையே காணப்படுவதால் சுருளி அருவிக்கு நீா்வரத்து குறைந்துவிட்டது. இதனிடையே விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குவிந்தனா். ஆனால் குளிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதிருந்ததால் பலரும் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனா்.
இந்த நிலையில், உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி ஆண்டும்தோறும் மிதமான வெப்ப நிலை காணப்படும். ஆனால், நிகழாண்டில் காலநிலை மாற்றம் காரணமாக வெப்ப அலை விசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.