மேகமலையில் மிக கனமழை: சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்துள்ளது குறித்து...
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். விடுமுறை நாளான சனிக்கிழமை ஆவலுடன் நீராட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு, தூவானம், அரிசிப்பாறை, காப்புக்காடு ஆகிய வனப்பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 4 மாதங்களாக நீரின்றி வறண்ட சுருளி அருவிக்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் சென்று குளிக்க சனிக்கிழமை தற்காலிகமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
Advertisement
Advertisement
கடந்த 19-ஆம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.
தற்போது மேகமலை அதைச் சுற்றிய மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
உத்தமபாளையம் வட்டாரம் அதை சுற்றிய பகுதியில் பெய்த இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Very heavy rain in Meghamalai: Tourists banned from bathing at Suruli Falls
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.