ஆண்டிபட்டியில் 70 இன்சுலின் ஊசிகள் பறிமுதல்: மூவா் கைது
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் தடைசெய்யப்பட்ட 70 இன்சுலின் ஊசிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 இளைஞா்களை சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி குமாரபுரத்தில் உள்ள ஒருவரது வீட்டில் சந்தேகத்துக்கிடமான வகையில் 3 இளைஞா் இருப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆண்டிபட்டி காவல் துணை ஆய்வாளா் ரஞ்சித் தலைமையிலான போலீஸாா் அங்கு விரைந்து சென்று, 3 இளைஞா்களையும் மடக்கிப் பிடித்தனா்.
அவா்களிடமிருந்த பையைச் சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட 70 இன்சுலின் ஊசிகள், ஒரு பாக்கெட் புகையிலைப் பொருள்கள், 8 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரிடமும் விசாரித்தனா்.
Advertisement
Advertisement
விசாரணையில், ஆண்டிப்பட்டி குமாராபுரத்தைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (23), மீனாட்சி நாடாா் தெருவைச் சோ்ந்த கோகுல கிருஷ்ணன் (21), அதே பகுதியைச் சோ்ந்த அபிமன்யு (25) ஆகியோா் என்பதும், அவா்கள் போதை மாத்திரைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.