சாலையை சீரமைக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முற்றுகை
சாத்தூரில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
சாத்தூரில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலகாந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பணிகள் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி, இப்பகுதியை சேர்ந்த பெண்கள் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், நகராட்சி அதிகாரிகளிடம் சாலையை முறையாக அமைக்க வேண்டும் என்று ஆணையாளரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். சாலை பணியை பார்வையிட்டு முறையாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.