FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குண்டும் குழியுமான சாலையால் விபத்து: மூதாட்டி சாவு

சிவகாசி அருகே  குண்டும் குழியுமான சாலையில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்தார்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

சிவகாசி அருகே  குண்டும் குழியுமான சாலையில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்தார்.
  சிவகாசி அருகே உள்ள கிச்சநாயக்கன் பட்டியைச் சேர்ந்த பட்டாசுத் தொழிலாளி மணிசங்கர் (33).இவர் தனது தாயார் சீனிம்மாளை(71), இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, கன்னிசேரியில் இறந்த உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றுள்ளார். 
  சிவகாசி-விளாம்பட்டி சாலையில், சன்னாசிபட்டி தரைபாலத்தில் வந்தபோது, சாலை குண்டும் குழியுமாக இருந்ததால், சீனியம்மாள் வாகனத்தில் இருந்து தவறி கிழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமுற்ற அவர் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மாரனேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments