திருச்சுழி அருகே சாலை விபத்து: அரசு மருத்துவமனை வாகன ஓட்டுநர் சாவு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் ஆரம்ப சுகாதார நிலைய வேன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் ஆரம்ப சுகாதார நிலைய வேன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
வீரசோழன் கிராமம் அருகே உள்ள என்.முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரது மகன் முகமது ரபீக்(44).இவருக்கு மனைவி, மகள் உள்ளனர். முகமது ரபீக், நரிக்குடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக வேன் ஓட்டுநராக பணியாற்றினார்.
புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு என்.முக்குளத்திலிருந்து வீரசோழன் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வீரசோழன் அருகே சாலையில் நிலைதடுமாறிக் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீரசோழன் காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி வீரசோழன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிணக்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.