அருப்புக்கோட்டை பகுதியில் சுதந்திர தின விழா
அருப்புக்கோட்டை பகுதியில் பள்ளி மற்றும் அமைப்புகள் சார்பில் புதன்கிழமை சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.
அருப்புக்கோட்டை பகுதியில் பள்ளி மற்றும் அமைப்புகள் சார்பில் புதன்கிழமை சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.
அருப்புக்கோட்டை சந்திரா நேசனல் பள்ளியில் சுதந்திரதின விழாக் கொண்டாட்டம் மற்றும் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் அப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்குப் பள்ளிச் செயலர் பி.சி.சரவணன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சங்கீதா சரவணன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பி.ராஜசேகரன் தலைமையில் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையப் பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம்: இச்சங்கத்தின் சார்பில் புதன்கிழமை சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை நகர் காவல் சார்பு ஆய்வாளர் வெற்றிச்செல்வன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி வைத்தார். விழாவுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க கெளரவத் தலைவர் டேனியல் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
திருச்சுழி கிளை நூலகம்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கிளை நூலகத்தில் புதன்கிழமை சுதந்திர தின விழாக் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு திருச்சுழி கிளை நூலகர் சு.பாஸ்கரன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். நூலக ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசன் உள்ளிட்ட பலர் பேசினர். விழாவில் நூலக வாசகர் வட்டத்தைச் சேர்ந்த சாரங்கபாணி, சிவராமன், சிறப்பு விருந்தினர்களாக சரவணன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.