ராஜபாளையம் அரசுப் பள்ளியில் இடை நிற்றலை தடுக்க பொம்மலாட்ட விழிப்புணர்வு
ராஜபாளையம், எஸ்.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளியில், வளர் இளம் பெண்கள் பள்ளிகளில் இடை நிற்றலைத் தடுக்க பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம், எஸ்.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளியில், வளர் இளம் பெண்கள் பள்ளிகளில் இடை நிற்றலைத் தடுக்க பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் சமூக கல்வி மற்றும் மக்கள் முன்னேற்ற மையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீட்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து பள்ளி செல்லும் வளர் இளம் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் கல்வியின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் சர்வேஸ்வரன் தலைமை வகித்தார்.
இதில் திருப்பூரைச் சேர்ந்த தொண்டு நிறுவன செயல் இயக்குநர் நம்பி பேசியதாவது: அரசுப் பள்ளிகளில் வளர் இளம் பெண்கள் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. பலர் குடும்பச் சூழல் காரணமாக வேலைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். வளர் இளம் பெண்களுக்கும் தங்களது உரிமைகள் குறித்த புரிதலோ அல்லது விழிப்புணர்வோ இல்லை. இதனால் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே படிக்கும் பருவத்தில் வளர் இளம் பெண்களுக்கு கல்வி கற்பதில் உள்ள உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் குறித்தும், படிக்காமல் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.