அருப்புக்கோட்டையில் மழை
அருப்புக்கோட்டை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் புதன்கிழமை மாலை சுமார் ஒரு மணிநேரம் மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அருப்புக்கோட்டை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் புதன்கிழமை மாலை சுமார் ஒரு மணிநேரம் மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இப்பகுதிகளில் கடந்த சனிக்கிழமை கன மழை பெய்தது. இதில் அருப்புக்கோட்டையில் உள்ள பல சிறுகண்மாய்கள், குட்டைகள் முழுவதும் நிரம்பின. பெரிய கண்மாய், செவல்கண்மாய் ஆகியவற்றிலும் நீர்வரத்து காணப்பட்டது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் புதன்கிழமை மாலை சுமார் 4.50 மணிக்கு இடி மின்னல், பலத்த காற்றுடன் பெய்யத் தொடங்கிய மழை ஒரு மணி நேரம் நீடித்தது.இதையடுத்து விவசாயிகள் உழவுப்பணிகளை தீவிரப்படுத்த இருப்பதாகக் கூறினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.