சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளையாபுரம் கிராமப் பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளையாபுரம் கிராமப் பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வெள்ளையாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர் தனது உறவினர்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் வேலை நடைபெற்றால் தனது உறவினர்களைத் தவிர மற்றவர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே 100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்துள்ள வெள்ளையாபுரம் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் பாகுபாடின்றி வேலை வழங்க வேண்டும் எனக் கோரி, அவ்வூர் பெண்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள், அதிகாரிகள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து வெள்ளையாபுரம் ஊராட்சி செயலாளர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.