FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புலியூரான் கிராமத்தில் பாலம் சேதம் கோயில் திருவிழாவுக்குள் சீரமைக்கப்படுமா?

அருப்புக்கோட்டை வட்டம், புலியூரான் கிராமத்தில் திருவிழாவின்போது அம்பாள் வீதி உலா  வரும் தெருவும் அதில் உள்ள

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

அருப்புக்கோட்டை வட்டம், புலியூரான் கிராமத்தில் திருவிழாவின்போது அம்பாள் வீதி உலா  வரும் தெருவும் அதில் உள்ள பாலமும் சேதமடைந்துள்ளதால் அவற்றை சீரமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புலியூரான் கிராமத்தில் உள்ள வடக்கு வாசல் செல்வியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா நடைபெறும். விழாவின் 7 ஆம் நாளன்று சப்பரத்தில் அம்பாள் வீதி உலா நடைபெறும். இந்நிலையில் அம்பாள் வீதி உலா வரும் பகுதியிலுள்ள கிழக்கு வீதியையும் பிரதானச் சாலையையும் இணைக்கும் சிறிய பாலம் சேதமடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக பாலத்தின் கான்கிரீட்டின் பெரும்பகுதி உடைந்துள்ளது. 
ஊரின் வடக்கே உள்ள கோயில், அதையடுத்துள்ள அரசுப் பள்ளி மற்றும் ஊரின் முக்கியப் பகுதிகளை இணைக்கும் பகுதியாக இப்பாலம் உள்ளது.  சேதமடைந்துள்ள இப் பாலத்தைக் கடக்கும் போது மாணவர்கள் அடிக்கடி விழுந்து காயம் அடைகின்றனர். 
இந்நிலையில் புரட்டாசி மாத விழாவையொட்டி அம்பாள் வீதி உலா நடைபெற உள்ளதால் இந்த பாலத்தையும்,சேதமடைந்து காணப்படும் கிழக்கு வீதியையும் விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments