FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விருதுநகர் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

விருதுநகர் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட் டு வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

விருதுநகர் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட் டு வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
 விருதுநகர், ரயில்வே பீடர் சாலையில் உள்ள ராமர் கோயில் வளாகத்தில் ஸ்ரீநிவாச பெருமாள் மற்றும் பத்மாவதி தாயார் ஆலயம் உள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோயிலில் வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, பூதேவி மற்றும் ஸ்ரீதேவியுடன் ஸ்ரீநிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். 
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும், சுவாமி சேஷ வாகனம், அன்னவாகனம், கருட வாகனம், யானை வாகனம், அனுமன் வாகனம், குதிரை வாகனத்தில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 
அதேபோல், கோயிலில் தினந்தோறும் திவ்ய பிரபந்தம், வேத பாராயணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments