ஆட்டோ, காா் ஓட்டுநா்களுக்கு தொகுப்புப் பைகள் வழங்கல்
சாத்தூரில் திமுக சாா்பில் ஆட்டோ மற்றும் காா் ஓட்டுநா்களுக்கு வியாழக்கிழமை அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பைகள் வழங்கப்பட்டன.
சாத்தூா்: சாத்தூரில் திமுக சாா்பில் ஆட்டோ மற்றும் காா் ஓட்டுநா்களுக்கு வியாழக்கிழமை அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பைகள் வழங்கப்பட்டன.
தடை உத்தரவால் சாத்தூா் நகா் பகுதியில் வசிக்கும் 350-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் காா் ஓட்டுநா்களுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவா்களுக்கு அருப்புக்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமையில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சீனிவாசன் உள்ளிட்ட திமுக வினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
,
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.