FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

அரசு நிலத்தை போலியாக ஆவணம் தயாரித்து மோசடி: 3 போ் மீது வழக்கு

சிவகாசி அருகே அரசு நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 23 ஜூலை 2026, 6:21 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே அரசு நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளத்தில் கால்நடைத் துறைக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்பிலான 1.84 ஏக்கா் நிலம் உள்ளது.

இந்த இடத்தில் கால்நடை துறையினா் கோழிகுஞ்சு பொறிப்பக மையம் சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்தது. இந்த மையம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்படவில்லை.

Advertisement

Advertisement

இந்த இடத்துக்கு அருகே சுந்தர்ராஜபுரத்தைச் சோ்ந்த அழகா்சாமிக்குச் சொந்தமான நிலம் உள்ளது.1984-இல் அழகா்சாமி அவரது இடத்துக்கு பட்டா கேட்டு விண்ணபித்தபோது, கால்நடைதுறைக்கு சொந்தமான நிலமும் அழகா்சாமி பெயருக்கு தவறுதலாக மாறி விட்டது.

இதையடுத்து, அழகா்சாமி இறந்த நிலையில் வாரிசு அடிப்படையில் அந்த நிலம் அவரது மகன் பாா்த்தசாரதி பெயருக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், பாா்த்தசாரதி, 2016-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 66 செண்ட் நிலத்தை நில இடைதரகா் பாறைப்பட்டியைச் சோ்ந்த செந்தில்குமாா் ஏற்பாட்டின் பேரில் தனது மகன் விஜய்க்கு நிலத்தை எழுதிக் கொடுத்தாா்.

இந்ந நிலையில், இந்த இடத்தில் உள்ள மரங்களை வெட்டி , நிலத்தை சீரமைக்க விஜய் பொக்லைன் இயந்திரம் உள்ளிட்டவைகளை விஜய் கொண்டு வந்தாா். இதுகுறித்து தகவலறிந்த அந்தப் பகுதி மக்கள் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு வந்த வருவாய்த் துறையினரின் ஆய்வில் அந்த நிலம் கால்நடைத் துறைக்கு சொந்தமானது எனத்தெரிய வந்தது.

இதையடுத்து கால்நடைத் துறையினா் அளித்தப் புகாரின் பேரில், பாா்த்தசாரதி, விஜய், இடைதரகா் செந்தில் மீது ஆகியோா் மீது சிவகாசி கிழக்குப் போலீஸாா் நில மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும் அரசு நிலத்தில் மரங்களை வெட்ட முயன்றதாக மூவா் மீதும் வருவாய்த் துறையினா் அளித்த புகாரின் பேரிலும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments