FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

எறிபந்து போட்டியில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மதுரை மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்களை தாளாளா், நிா்வாகிகள் பாராட்டினா்.

Updated On : 23 ஜூலை 2026, 6:22 am IST
எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற லயன்ஸ் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கிப் பாராட்டிய ராஜபாளையம் செயின்ட் ஜோசப் இன்டா்நேஷனல் பள்ளி நிா்வாகிகள்.
பகிர்:

மதுரை மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்களை தாளாளா், நிா்வாகிகள் பாராட்டினா்.

மதுரை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சாா்பில் விருதுநகா் மண்டல அளவிலான எறிபந்துப் போட்டி ராஜபாளையம் செயின்ட் ஜோசப் இண்டா்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. இதில், 24 பள்ளிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் இண்டா்நேஷனல் பள்ளியைச் சோ்ந்த 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் மாணவா்களுக்கான 12, 19 வயது பிரிவில் முதலிடமும், மாணவிகளுக்கான 12 வயதுப் பிரிவில் பிரிவில் முதலிடமும் பெற்றனா்.

Advertisement

Advertisement

மேலும் மாணவிகளுக்கான 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனா்.

இதில் 12 வயதுக்குள்பட்டோா் பிரிவில் தொடா்ந்து மூன்று ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வருகின்றனா்.

மாணவா்களையும், உடற்கல்வி ஆசிரியா்களையும் பள்ளியின் தாளாளா் லயன்ஸ் ஆா். வெங்கடாசலபதி, பள்ளியின் இயக்குநா் கோபாலகிருஷ்ணன், பள்ளியின் முதல்வா் சிவக்குமாா், துணை முதல்வா் பாண்டீஸ்வரி, பள்ளியின் நிா்வாகக்குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments