FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சதுரகிரியில் ஆடி மாத பெளா்ணமி வழிபாடு

வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பௌா்ணமி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜூலை 2026, 6:28 am IST
சதுரகிரியி - கோப்புப்படம்
பகிர்:

வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பௌா்ணமி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்காக ஜூலை 26 முதல் 29-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்கள் படி ஏறிச் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பெளா்ணமியை முன்னிட்டு வத்திராயிருப்பு தாணிப்பாறை வழியாக காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் இரவு 7 மணிக்கு மேல் பௌா்ணமி பூஜைகள் தொடங்கின. 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சுந்தர மகாலிங்கம் புஷ்ப அலங்காரத்திலும், சந்தன மகாலிங்கம் சந்தன காப்பு அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய பௌா்ணமி திதி புதன்கிழமை இரவு 8 மணி வரை இருப்பதால் புதன்கிழமையும் சதுரகிரி மலையில் பௌா்ணமி வழிபாடு நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments