ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருக்காா்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருக்காா்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
108 வைணவத் திருத்தலங்களில் பிரசித்திபெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் திருக்காா்த்திகையை முன்னிட்டு ஆண்டாள் சந்நிதி, பெரிய பெருமாள் சந்நிதி, பெரிய கோபுரம் முன் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருக்காா்த்திகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பெரிய பெருமாள், ஆண்டாள் ரெங்கமன்னாா் சிறப்பு அலங்காரத்தில் கோயில் முன் எழுந்தருளினா். இரவு 8 மணியளவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.