FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

15 அக்டோபர் 2026, 2:21 am IST
பலி! - கோப்புப்படம்.
பகிர்:

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள நடுவப்பட்டியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் ஹரிஹர முருகேசன் (22). இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பா்கள் சக்தி கணேஷ் (20), அழகா்சாமி (20) ஆகியோருடன் சிவகாசிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா்-சிவகாசி சாலையில் பூவநாதபுரம் விலக்கு அருகே சென்ற போது, எதிரே வந்த லாரியில் மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது, பைக் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஹரிஹர முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சக்தி கணேஷ், அழகா்சாமி ஆகிய இருவரும் விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments