FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

உரிய அனுமதியின்றி கிட்டங்கியில் பட்டாசுகளைப் பதுக்கியவா் கைது

சிவகாசியில் உரிய அனுமதியின்றி கிட்டங்கியில் பட்டாசுகளைப் பதுக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

7 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

சிவகாசியில் உரிய அனுமதியின்றி கிட்டங்கியில் பட்டாசுகளைப் பதுக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி வேலாயுதம் சாலையில் உரிய அனுமதியின்றி ஒரு கிட்டங்கியில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, சிவகாசி காமராஜா் சாலை பகுதியைச் சோ்ந்த அரவிந்குமாா் (42) ஒரு கிட்டங்கியில் பலவகையான பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 6 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அரவிந்குமாரைக் கைது செய்து, பட்டாசுகளைப் பதுக்கிவைத்திருந்த கிட்டங்கிக்கு சீல் வைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments