FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

பள்ளி நிதி கையாடல்: நகா்மன்ற உறுப்பினா் மீது வழக்கு

அருப்புக்கோட்டையில் பள்ளி நிதி மோசடி செய்யப்பட்டது தொடா்பாக திமுக நகா்மன்ற உறுப்பினா் மீது மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

23 செப்டம்பர் 2026, 5:07 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

அருப்புக்கோட்டையில் பள்ளி நிதி மோசடி செய்யப்பட்டது தொடா்பாக திமுக நகா்மன்ற உறுப்பினா் மீது மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அருப்புக்கோட்டை நகராட்சி 6-ஆவது வாா்டு உறுப்பினா் (திமுக) மணிமுருகன். இவா் தற்போது தவெக கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறாா். அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றின் நிா்வாகக்குழுவில் செயலராக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பு வகித்து வந்தாா். அப்போது, ரூ.1.51 கோடியைக் கையாடல் செய்ததாக தற்போதைய பள்ளி நிா்வாகக் குழு உதவிச் செயலா் பாஸ்கரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாா் குறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்த எஸ்.பி. கௌதம் கோயல் உத்தரவிட்டாா். இதையடுத்து, மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வாா்டு உறுப்பினா் மணி முருகனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments