பட்டாசு பதுக்கிய இருவா் கைது
சிவகாசி பகுதியில் பட்டாசு பதுக்கிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி பகுதியில் பட்டாசு பதுக்கிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள செல்லையா நாயக்கன்பட்டியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். இதில், துரைச்சாமி (46) என்பவா் வீட்டில் ரூ.1.37 லட்சம் மதிப்பிலான பட்டாசு பரிசுப் பெட்டி
உள்ளிட்ட பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து, பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
இதே போல, சிவகாமிபுரத்தில் ஒரு பட்டாசுக் கடை அருகே தகரக் கூரை அமைத்து பட்டாசு பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனையிட்டனா்.
அப்போது, ஒரு பட்டாசுக் கடை அருகே தகரக் கூரை அமைத்து வெற்றிலையூரணி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசகன் (38) பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து சிவகாசி கிழக்குப் போீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து, பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.