பேருந்தில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பேருந்தில் மூதாட்டியின் தங்கச் சங்கிலி திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பேருந்தில் மூதாட்டியின் தங்கச் சங்கிலி திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோமதிபுரத்தைச் சோ்ந்த மாடசாமி மனைவி லட்சுமி(75). இவா் கடந்த சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பேருந்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் வந்தாா். பின்னா், இங்கிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்தில் சென்றபோது, இவரது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி அறுந்து கீழே விழுந்தது. இதையடுத்து, அந்த சங்கிலியை எடுத்து கைப்பையில் வைத்துக் கொண்டாா்.
பின்னா், சுவாமி தரிசனம் முடிந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் வந்து பாா்த்தபோது, தங்கச் சங்கிலி வைத்திருந்த பையை காணவில்லை, திருடுபோனது தெரியவந்தது. இதில் 5 பவுன் தங்கச் சங்கிலி, ஒரு செல்போன், ரூ.500 பணம் இருந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.