துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் இன்று குறை கேட்பு
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் வெள்ளிக்கிழமை குறைகளை கேட்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் வெள்ளிக்கிழமை குறைகளை கேட்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் :
புதுச்சேரி துணை நிலை ஆளுநர், காரைக்கால் மாவட்ட மக்களிடம் குறைகளை காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (10.8.2018) மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர், 10-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். புகார்களை எழுத்து வடிவில் அளிக்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.