FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருநள்ளாறு கோயில்  நகர திட்டப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து அமைச்சர் ஆலோசனை

திருநள்ளாறு கோயில் நகரத் திட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் ஆலோசனை நடத்தினார்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

திருநள்ளாறு கோயில் நகரத் திட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் ஆலோசனை நடத்தினார்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசிக்க நாடெங்குமிருந்து பக்தர்கள் வருகின்றனர். இதனால் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்துத் தரும் வகையில் திருநள்ளாறை கோயில் நகரமாக அறிவித்து, கோயில் நகருக்கான மேம்பாட்டுத் திட்டப் பணிகளை புதுச்சேரி அரசு செய்து வருகிறது.
திருநள்ளாறு நளன் குளம் மேம்பாடு, பக்தர்களுக்கான வரிசை வளாகம், வடக்கு புறவட்டச் சாலை, வாகனங்கள் பார்க்கிங், பக்தர்கள் தங்குவதற்கான விடுதி உள்ளிட்ட பல பணிகள் இந்த திட்டத்தில் அடங்கும். குளம் மேம்பாடு, வரிசை வளாகம், புறவட்டச்சாலை உள்ளிட்டவை பயன்பாட்டில் உள்ளன.
நளன் குளக் கரையில் பக்தர்களுக்காக கட்டப்பட்ட வணிக வளாகம், பல்நோக்குக் கூடம் ஆகியவை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதுபோன்ற பல திட்டங்கள் முழுமைப்பெறாமல் உள்ளது. இதுகுறித்து விவாதித்து சிக்கல்களை களையும் விதத்திலான கூட்டம் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தலைமையில் திருநள்ளாறில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் வி. சண்முகசுந்தரம், செயற்பொறியாளர்கள் ஏ. ராஜசேகரன், மதிவாணன், காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்து, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரன் மற்றும் மின்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கோயில் நகரத் திட்டப் பணிகள் மேற்கொள்ள கையப்படுத்தப்பட்ட நிலம், இதில் மேற்கொள்ளவேண்டிய திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நளன் குளத்தைச் சுற்றி கட்டப்பட்ட வணிக வளாகம் மற்றும் பல்நோக்குக் கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆலோசனைகளை வழங்கி அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், திருநள்ளாறு கடைத்தெருவில் நெரிசலின்றி இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது, சாலைகளை மேம்படுத்துவது, தெற்கு புறவட்டச் சாலை அமைப்புப் பணி உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் அமைச்சர் விவாதித்து, இதற்கான பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments