FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை பி.பி.சி.எல். ஊழியர்களுக்கு அமல்படுத்தக் கோரி வாயில் கூட்டம்

அரசு ஊழியர்களைப் போல், பி.பி.சி.எல். ஊழியர்களுக்கும் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

அரசு ஊழியர்களைப் போல், பி.பி.சி.எல். ஊழியர்களுக்கும் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி மின் திறல் குழுமத்தைச் சேர்ந்த ஊழியர்கள் தங்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை புதுச்சேரி அரசு நிறைவேற்ற வேண்டும் என கடந்த 3 மற்றும் 4-ஆம் தேதி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி வந்தனர். மேலும், கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், காரைக்கால் பகுதி போலகத்தில் உள்ள பி.பி.சி.எல். அலுவலகம் முன்பாக வாயிற்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கண்டன வாயில் கூட்டத்துக்கு பி.பி.சி.எல். ஊழியர் சங்கத் தலைவர் பட்டாபிராமன் தலைமை வகித்தார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கெளரவத் தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், இணைப் பொதுச் செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், பி.பி.சி.எல். ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். 
இந்த நிறுவனம் தொடங்கியது முதல் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் நிலையில், அதன் ஊழியர்களுக்கு 7 -ஆவது ஊதியக்குழு அமல்படுத்தப்படாமல் உள்ளதால் ஊழியர்கள் மன வருத்தத்துடனும், மிகுந்த மன வேதனையுடனும் பணி செய்து வருகின்றனர். எந்த ஒரு குழுவின் பரிந்துரையும் இல்லாமல் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை ஊழியர்களுக்கு அமல்படுத்த பி.பி.சி.எல். ஆட்சிமன்றக் குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது.
இந்த  நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.30 கோடியை புதுச்சேரியில் உள்ள அமுதசுரபி நிறுவனத்துக்கும், ரூ.10 கோடியை ஏ.எஃப்.டி. நிறுவனத்திற்கும், ரூ.5 கோடியை கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் என ரூ.45 கோடியைக் கடனாக வழங்கியுள்ளது. அந்த தொகை மற்றும் வட்டியை வசூல் செய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதுபோல், மின்துறையிடமிருந்து கடந்த 10 ஆண்டுகளாக வசூல் செய்யாமல் நிலுவை தொகையாக உள்ள ரூ.50 கோடியை வசூல் செய்யாமலும், அதற்கான சர் சார்ஜ் ரூ.66.77 கோடியை தள்ளுபடி செய்துள்ள பி.பி.சி.எல். ஆட்சிமன்றக் குழுவின் செயல் கண்டிக்கத்தக்கது என நிர்வாகிகள் பேசினர். பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். சங்கப் பொறுப்பாளர் முகுந்தன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments