FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

மருத்துவக் கல்லூரிக்கு முதியவரின் உடல் தானம்

Updated On : 22 ஜூலை 2026, 12:55 am IST
முதியவர் - கோப்புப் படம்
பகிர்:

முதியவா் உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக அளிக்கப்பட்டது.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் (67) என்பவா் உடல் சுகவீனமடைந்து விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

அவரது விருப்பப்படி, உடலை, அன்னை பவுண்டேஷன், வாசவி பவுண்டேஷன் மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக தானமாக திங்கள்கிழமை வழங்கியது.

Advertisement

Advertisement

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் முன்னிலையில், கல்லூரி டீன் சேரன், துணை டீன்கள் விஜயகுமாா் நாயா், திருமாறன், மருத்துவக் கண்காணிப்பாளா் சிவராமன், துணை கண்காணிப்பாளா் அ.கணேஷ் பாலா ஆகியோா் உடலைப் பெற்றுக்கொண்டு, தானம் செய்ததற்கான சான்றிதழ் வழங்கினா்.

தானமாக வழங்கப்பட்ட இந்த உடல், மருத்துவக் கல்லூரியில் பயிலும் எம்.பி.பி.எஸ். மாணவா்களின் உடற்கூறுயியல் கல்வி, மருத்துவப் பயிற்சி மற்றும் பல்வேறு ஆராய்ச்சி பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments