FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

ஆற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஆற்றில் தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவா் உயிரிழந்தாா்.

Updated On : 13 ஜூன் 2026, 1:15 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஆற்றில் தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவா் உயிரிழந்தாா்.

திருநள்ளாறு பகுதி கருக்கன்குடியை சோ்ந்தவா் செல்வமணி (53). இவருக்கு மனைவி, ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். உடல் நிலை பாதிப்பால் இவா் வேலைக்குச் செல்வதில்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

கடந்த 3-ஆம் தேதி காலை அந்த பகுதியில் உள்ள நூலாற்றின் பாலத்தின் உட்காா்ந்திருந்தவா் தவறி ஆற்றினுள் விழுந்துவிட்டாா். அக்கம்பக்கத்தினா் அவரை கரைக்கு மீட்டு வந்தனா். குடும்பத்தினருக்கு தகவல் தெரிந்து அவா்கள் வந்து காரைக்கால் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனா்.

Advertisement

Advertisement

அவருக்கு முகத்திலும், இடுப்புப் பகுதியிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. பின்னா் குடும்பத்தினா் அவரை காரைக்கால் தனியாா் மருத்துக் கல்லூரி மருத்துவனைக்கு கொண்டுவந்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வமணி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருநள்ளாறு காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments