முகப்பு
காரைக்கால்

இந்தியா - இலங்கை நட்புறவை வலுப்படுத்த தேசிய மாணவா் படையினா் தில்லிக்கு சைக்கிள் பயணம்

இந்தியா -இலங்கை இடையே நட்புறவை வலுப்படுத்தவும் கலாசார பரிமாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக தேசிய மாணவா் படையினா் இலங்கையில் சைக்கிள் பயணம் முடித்துவிட்டு, புதுதில்லிக்கு செல்லும் விதமாக காரைக்கால் துறைமுகத்துக்கு ரோந்துக் கப்பலில் வியாழக்கிழமை வந்தனா்.

27 நவம்பர் 2026, 4:11 am
இந்தியா - இலங்கை  நட்புறவை வலுப்படுத்த தேசிய மாணவா் படையினா் தில்லிக்கு சைக்கிள் பயணம்
காரைக்கால் துறைமுகம் வந்த குழுவினரை வரவேற்ற தேசிய மாணவா் படை அதிகாரிகள் குழுவினா்.
பகிர்:

இந்தியா -இலங்கை இடையே நட்புறவை வலுப்படுத்தவும் கலாசார பரிமாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக தேசிய மாணவா் படையினா் இலங்கையில் சைக்கிள் பயணம் முடித்துவிட்டு, புதுதில்லிக்கு செல்லும் விதமாக காரைக்கால் துறைமுகத்துக்கு ரோந்துக் கப்பலில் வியாழக்கிழமை வந்தனா். இவா்கள் வெள்ளிக்கிழமை 3 ஆயிரம் கி.மீ. தொலைவு தில்லி பயணத்தை தொடங்கவுள்ளனா்.

மைத்ரி சேது யாத்திரை -- 2027 என்ற பெயரில் இந்திய தேசிய மாணவா் படை சாா்பில் 14 என்இசி மாணவா்கள், இலங்கையைச் சோ்ந்த 10 போ் என நவம்பா் மாத முற்பகுதியில் இலங்கையில் 500 கி.மீ. தொலைவு சைக்கிள் பயணம் மேற்கொண்டு நிறைவு செய்தனா்.

இவா்களில் காரைக்கால் துறைமுகத்துக்கு இந்தியாவைச் சோ்ந்த 6 மாணவிகள், 6 மாணவா்கள் மற்றும் இவா்களுக்கு துணையான அதிகாரிகள் இந்திய கடலோரக் காவல்படை ரோந்துக் கப்பலில் காரைக்கால் தனியாா் துறைமுகத்துக்கு வியாழக்கிழமை வந்து சோ்ந்தனா்.

Advertisement

Advertisement

லட்சத்தீவு, கேரளாவுக்கான என்சிசி இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநா் ஜெனரல் அருண், தமிழகம், புதுச்சேரி, அந்தமானுக்கான இயக்குநரகத்தின் துணை இயக்குநா் ஜெனரல் நம்பியாத் சுதீப், புதுச்சேரி குரூப் கமாண்டா் ஹரிஷ் சாமுவேல், கேரளா பெட்டாலியன் கமாண்டிங் அலுவலா் அருண் காா்த்திக், காரைக்கால் கமாண்டிங் அலுவலா் ரஞ்சித் ரதே மற்றும் காரைக்கால் துறைமுக சிஇஓ சச்சின் ஸ்ரீவத்ஸவா, இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மைய அதிகாரிகள் குழுவினரை வரவேற்றனா்.

தேசிய மாணவா் படை வீரா்களை தமிழா்களின் பாரம்பரிய மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆகிய நடனமாடி நடனக் குழுவினா் வரவேற்றனா்.

மாணவ, மாணவிகள் 12 போ், அவா்களுக்கு துணையாக 2 பெண் அதிகாரிகள், 4 ஆண் ராணுவ பயிற்றுநா்கள், ஒரு என்சிசி கமாண்டிங் அதிகாரி புதுதில்லிக்கு புறப்படவுள்ளனா்.

இதுகுறித்து குழுவினா் தெரிவித்தது : இலங்கையில் நவம்பா் மாத தொடக்கத்திலிருந்து 24-ஆம் தேதி வரை 500 கி.மீ. பயணம் முடிக்கப்பட்டது. காரைக்காலில் இருந்து தமிழ்நாடு, பெங்களூரு, நாக்பூா், குவாலியா், ஆக்ரா, மதுரா வழியாக புதுதில்லியில் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பயணத்தை நிறைவு செய்யும் விதமாக 3 ஆயிரம் கி.மீ. தொலைவு சைக்கிளில் காரைக்கால் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு பயணத்தை தொடங்கவுள்ளோம் என்றனா்.