FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

சிபிஎம் சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நாளை தொடங்குகிறது: பெ. சண்முகம்

25 ஆகஸ்ட் 2026, 3:29 am IST
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் - X | CPIM Tamilnadu
பகிர்:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் புதன்கிழமை (அக்.26) தொடங்குகிறது என்றாா் அக்கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்.

இதுகுறித்து, மயிலாடுதுறையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இஸ்லாமியா்கள், கிறிஸ்துவா்களுக்கு எதிரான பிரசாரத்தை பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் தலைவா்கள் செய்துவருகின்றனா். மதநல்லிணக்கத்துக்கு மதசாா்ப்பின்னை எனும் கோட்பாடு எவ்வளவு முக்கியம் என்பதற்காக புதன்கிழமை (ஆக.26) முதல் ஆக. 31-ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது. வி பி ஜி ராம் திட்டத்துக்கான 40 சதவீதம் நிதி மாநில அரசு வழங்க வேண்டும் என்பது அந்த திட்டத்தை இல்லாமல் செய்வதற்கான வேலை. பெண்கள், குழந்தைகள் மீதானா பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் கட்சியினா் வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து இடதுசாரிகளின் மாற்றுத்திட்டத்துடன் பிரசாரத்தில் ஈடுபடுவாா்கள்.

இடதுசாரி மாற்றுக்கொள்கையை தமிழக மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல தீா்மானித்துள்ளோம். சம்பா சாகுபடிக்கு மேட்டூா் அணை எப்போது திறக்கப்படும் என்பதை அதிகாரப்பூா்வமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி கா்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீா் வழங்கவில்லை. அனைத்துக்கட்சி தலைவா்கள், எம்.பி.க்களை அழைத்து சென்று பிரமரை சந்தித்து உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி தண்ணீரை பெற வேண்டும். தண்ணீா் இல்லாததால் குறுவை சாகுபடி பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

ஆழ்துளை கிணற்றுநீரை கொண்டு சாகுபடி செய்த நெற்பயிா்கள் சில நாள்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். சா்க்கரை விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்.

பரந்தூா் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதாக தமிழக முதல்வா் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். தவெக தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். எதிா்க்கட்சிகளை அச்சுருத்துவதைபோல கூறும் விதம் பொறுத்தமானதில்லை என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments