FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எம்எல்ஏக்களுக்கு அரசுப் பணத்தில் ஏன் கார் வழங்க வேண்டும்? பெ. சண்முகம்

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்குவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கருத்து...

செய்தியாளர் சந்திப்பில் பெ. சண்முகம் - கோப்புப் படம்
பகிர்:

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்குவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். பேரவைக்கு புதிய எம்எல்ஏக்கள் வந்திருக்கிறார்கள். ஏழ்மையான நிலையில் கார் இல்லாத சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

ஆனால் ஏற்கெனவே 4- 5 கார்கள், 20 - 25 கார்கள் வைத்திருக்கிறவர்கள் எல்லாம் எம்எல்ஏ ஆகியிருக்கிறார்கள். காரை எங்கு நிறுத்துவது என்று தெரியாமல் அதை நிறுத்த நிலம் வாங்குகிறார்கள். எனவே, அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் என்பது ஏற்புடையது அல்ல.

தொகுதி முழுவதும் சென்று மக்கள் பணியாற்ற கார் அவசியம். ஆனால் ஏற்கனவே சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு எதற்காக அரசு செலவில் கார் வழங்க வேண்டும்?

கார் வாங்க முடியாத எம்எல்ஏக்களுக்கு அரசு கடனுதவி வழங்கி கார் வாங்க உதவலாமே தவிர, ஏற்கனவே அரசு நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில் அரசுப் பணத்தை எடுத்து எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. எனவே அரசு இந்த் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.

summary

CPIM State Secretary P. Shanmugam comments on the provision of cars to all MLAs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments