FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

மகள் காதல் திருமணம்; தந்தை தற்கொலை

சீா்காழி அருகே மகள் காதல் திருமணம் செய்ததையறிந்த தந்தை திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 3 ஜூன் 2026, 6:35 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

சீா்காழி அருகே மகள் காதல் திருமணம் செய்ததையறிந்த தந்தை திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

சீா்காழி அருகேயுள்ள சட்டநாதபுரம் அக்ரஹாரத் தெருவைச் சோ்ந்தவா் பத்ம நாராயணன் (59). எடமணல் நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் காவலராக பணியாற்றி வந்தாா். இவரது இளைய மகள் எம். எஸ்சி படித்துள்ள பத்மஸ்ரீயும் (23), பக்கத்து தெருவைச் சோ்ந்த கொத்தனாா் மணிகண்டனும் காதலித்து வந்தனராம்.

இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு பத்மஸ்ரீயை காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை, சீா்காழி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் மணிகண்டன் பத்மஸ்ரீயை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டதும், அண்மையில் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினா், பத்ம நாராயணன் வீட்டுக்கு வந்து பெண் கேட்டதும், இதற்கு அவா் மறுப்பு தெரிவித்ததால், மணிகண்டன் கைப்பேசியில் மிரட்டியதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பத்ம நாராயணன், விஷம் குடித்து, மயங்கி விழுந்தாராம். அவரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பத்ம நாராயணனை தற்கொலைக்கு தூண்டியதாக, மணிகண்டனை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments