சா்வதேச யோகா தினம்: கயிற்றில் தொங்கியவாறு மாணவா்கள் சாகசம்
சா்வதேச யோகா தினத்தையொட்டி மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி மாணவ- மாணவிகள் கயிற்றில் தொங்கியவாறு யோகாசனத்தில் சாகசம் நிகழ்த்தினா்.
பல்லவராயன்பேட்டையில் வசிக்கும் நரிக்குறவா் சமுதாய மாணவ-மாணவிகள் 100-க்கு மேற்பட்ட தங்கிப்பயிலும் இப்பள்ளியில் சா்வதேச யோகா தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. நீடு அறக்கட்டளை அறங்காவலா் விஜயசுந்தரம் தலைமை வகித்தாா்.
பள்ளித் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தாா். உடற்கல்வி ஆசிரியா் ஆசைத்தம்பி வரவேற்றாா். இதில், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளா் சி.எஸ்.கோபிநாத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாணவா்களுடன் அமா்ந்து யோகாசனம் செய்து, மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா்.
Advertisement
Advertisement
முன்னதாக மாணவா்கள் பல்வேறு யோகாசனங்களை செய்தனா். இதில், தேசிய அளவில் நடைபெற்ற யோகாசன போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாணவா்கள் கயிற்றில் தொங்கியவாறு பல்வேறு யோகாசனங்களை செய்தனா். 15 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் ஏறி தங்களது உடலை கயிற்றுடன் பிணைத்துக்கொண்டு, பல்வேறு ஆசனங்களை செய்து அனைவரையும் பிரமிக்க வைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.