FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாட்டியப் பள்ளி 5- ஆம் ஆண்டு விழா

மயிலாடுதுறை அபிநயா பரத நாட்டியப் பள்ளியின் 5 - ஆம் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடை பெற்றது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

மயிலாடுதுறை அபிநயா பரத நாட்டியப் பள்ளியின் 5 - ஆம் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடை பெற்றது.
மயிலாடுதுறை அருள்மிகு மயூரநாதர் மேலவீதியில் கடந்த 5 ஆண்டுகளாக அபிநயா நாட்டியப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் பரத நாட்டியம் பயிலும் மாணவியர் 2 முறை கின்னஸ் சாதனைக்கான முயற்சியில்  ஈடுபட்டுள்ளனர். பள்ளியின் 5 -ஆம் ஆண்டு தொடக்க விழா மயிலாடுதுறையை அடுத்த திருவிழந்தூரில் நடைபெற்றது. இதையொட்டி, நாட்டியப் பள்ளி மாணவியர் பங்கேற்ற பரத நாட்டிய  நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மயிலாடுதுறை தொழிலதிபர்கள் எஸ். சிவலிங்கம், எஸ்.வி. பாண்டுரெங்கன், சி. செந்தில்வேல், ஆர். ஜெயக்குமார், நகர்மன்ற  முன்னாள் உறுப்பினர் சுதா வெங்கட்ராமன், சென்னை தனியார் நிறுவனத்தின் பொறியாளர் கே. ரவிச்சந்திரன்  ஆகியோர் பேசினர்.
நாட்டியப்  பள்ளியின் குரு கே. உமாமகேஸ்வரி  வரவேற்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி இயக்குநர் எஸ். கல்யாண்குமார் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments