FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

குளங்களில் தண்ணீர் நிரப்பக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை வட்டம், நல்லத்துக்குடி  கிராமத்தில்  உள்ள குளங்களிலும் நீர் நிரப்ப வலியுறுத்தி,  அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன்,  வறண்டு

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 8:58 am IST
பகிர்:

மயிலாடுதுறை வட்டம், நல்லத்துக்குடி  கிராமத்தில்  உள்ள குளங்களிலும் நீர் நிரப்ப வலியுறுத்தி,  அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன்,  வறண்டு காணப்படும் குளத்தில் அமர்ந்து கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில்  ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
நல்லத்துக்குடி கிராமத்தில் உள்ள குளங்களுக்கு  நீர்வரும்  வாய்க்கால்கள் அனைத்தும்  ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தும், நல்லத்துக்குடி கிராமத்தில் உள்ள  செல்லியம்மன் கோயில் குளம், உடையார்குளம், அல்லிக்குளம், ஆயிகுளம் உள்ளிட்ட 8  குளங்கள் நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால், குடி நீர்  தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நல்லத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் திரண்டு வந்து, வறண்டு காணப்படும்  உடையார் குளத்தில் அமர்ந்து, அனைத்துக் குளங்களிலும்  தண்ணீர் நிரப்ப நடவடிக்கை  எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments