FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

வெள்ள நீரை காண கொள்ளிடத்தில் குவிந்த மக்கள்

கொள்ளிடம் ஆற்றில் ஆர்ப்பரித்து, இருகரைகளையும், பாலத்தையும் தொட்டு செல்லும் வெள்ள நீரை காண ஞாயிற்றுக்கிழமை அதிகளவு பொதுமக்கள் கூடினர் . 

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 9:36 am IST
பகிர்:

கொள்ளிடம் ஆற்றில் ஆர்ப்பரித்து, இருகரைகளையும், பாலத்தையும் தொட்டு செல்லும் வெள்ள நீரை காண ஞாயிற்றுக்கிழமை அதிகளவு பொதுமக்கள் கூடினர் . 
காவிரி மற்றும் கொள்ளிடத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு இருகரைகளையும் மட்டுமன்றி ஆறுகளுக்கிடையில் உள்ள பாலத்தை தொட்டுச் சென்றவாறு தண்ணீர் சென்று கடலில் கலந்து கொண்டிருக்கிறது. கடந்த 2005-ஆம் ஆண்டு இவ்வாறு கொள்ளிடம் ஆற்றில் சுமார் 2.5 லட்சம் கன அடி நீர் சென்றது. அதன்பிறகு, வறண்டு கடல் தண்ணீர் உட்புகுந்து காணப்பட்ட கொள்ளிடம் ஆறு தற்போது காவிரி நீர் உள்ளதால் கடல்போல் காட்சியளிக்கிறது. இதை பாகக்க நாள்தோறும் பொதுமக்கள் நாகை-கடலூர் மாவட்டங்களை இணைக்கும் கொள்ளிடம் பாலத்துக்கு வந்து செல்கின்றனர்.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் குழந்தைகளுடன் கொள்ளிடம் பாலத்துக்கு வந்து வெள்ளநீரை பார்த்து ரசித்து செல்கின்றனர். சிலர் பாலத்தில் நின்றவாறு போலீஸ் தடையையும் மீறி செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மக்கள் கூட்டம் அதிகம் கூடியதால் கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். இதேபோல் கொள்ளிடம் ரயில்வே பாலத்திலும் பொதுமக்கள் அதிகளவு வந்து கொள்ளிடம் ஆற்றில் செல்லும் தண்ணீரை பார்த்து ரசித்தனர். கொள்ளிடம் பாலத்தில் செல்லும் வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்ல போலீசாரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments