உம்பளச்சேரி வாலீஸ்வரமுடையார் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த உம்பளச்சேரி வாலீஸ்வரமுடையார் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா செந்தமிழ் மந்திரங்கள் ஓதி திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த உம்பளச்சேரி வாலீஸ்வரமுடையார் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா செந்தமிழ் மந்திரங்கள் ஓதி திங்கள்கிழமை நடைபெற்றது.
தலைஞாயிறு ஒன்றியத்தில் அமைந்துள்ளது உம்பளச்சேரி கிராமம். இங்கு வளர்க்கப்பட்டு வரும் உம்பளச்சேரி பாரம்பரிய இன பசு, காளை மாடுகள் தேசிய அளவில் சிறப்பு பெற்றவை. இங்குள்ள சிவகாமி அம்மன் உடனமர் வாலீஸ்வரமுடையார் கோயில் பழைமை வாய்ந்தது. இந்த கோயிலை கால்நடை வளர்ப்போர் தங்களது தெய்வமாக வழிபடுகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் நிதி உதவியுடன் கிராம வாசிகள் கோயிலை திருப்பணி செய்து முடித்தனர். திருக்குட நன்னீராட்டுக்கான வேள்வி வழிபாடுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றன.
கோவை, தென்காசி ஆதீனம் திருநாவுக்கரசர் திருமடம் முத்து சிவராமசாமி அடிகளார் தலைமையில் தமிழ் வழி மந்திரங்கள் ஓதப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலையில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவகிரக மண்டபம் ஆகியவைகளுக்கும் நீராட்டு நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.