FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

கோஷ்டி மோதல்: மேலும் 9 பேர் கைது

குத்தாலம் அருகே இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக மேலும் 9 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On : 26 ஜூன் 2018, 8:28 am IST
பகிர்:

குத்தாலம் அருகே இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக மேலும் 9 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் சேத்தூர் மேலத்தெருவில் உள்ள கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா தொடர்பாக இருபிரிவினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை இருபிரிவினரும் மோதிக்கொண்டனர்.
 இதுதொடர்பாக, பெரம்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இரு பிரிவையும் சேர்ந்த 14 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
 இந்நிலையில், கலியன் என்பவரது தரப்பில் கலியன்(38), பிரபாகரன்(25), செந்தில்குமார் (35), குஞ்சு (65) ஆகிய நால்வரும், சேதுராமன் என்பவரது தரப்பில் மாரியப்பன் (40), பரமானந்தம் (26), மகாலிங்கம் (60), லோகநாதன் (42), கண்ணு (50) ஆகிய 5 பேரும் என மொத்தம் 9 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இவர்களை சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments