FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

துர்கா பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு

நாகை மாவட்டம், பூம்புகாரில் உள்ள பிரசித்தி பெற்ற துர்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

நாகை மாவட்டம், பூம்புகாரில் உள்ள பிரசித்தி பெற்ற துர்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பூம்புகார் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம மக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரால் தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது, திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், குடமுழுக்கு விழா பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின. 
தொடக்க நிகழ்வாக விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி மற்றும் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. 
இதையடுத்து, ஐந்து கால யாக பூஜைகள் நடைபெற்றன. ஆறாம் கால யாக பூஜை வியாழக்கிழமை காலை தொடங்கியது. கிரகப்பிரிதி, கோமாதா பூஜை, யாத்ரா தானம், சுமங்கலி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், மேள- தாளம் முழங்கிட புனித நீர் அடங்கிய யாக குடங்கள் புறப்பட்டு, கோயிலின் கோபுரத்தை அடைந்தது.
தொடர்ந்து, கோபுர கலசத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராமச்சந்திரன், விழாக்குழுவினர் மற்றும் கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments