FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வேளாங்கண்ணியில் இன்று அலங்கார தேர் பவனி

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி வெள்ளிக்கிழமை ( செப்.7) இரவு நடைபெறுகிறது.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி வெள்ளிக்கிழமை ( செப்.7) இரவு நடைபெறுகிறது.
கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா அக். 29-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. 
விழா நிகழ்ச்சியாக, தினமும் பகல் 12 மணிக்கு கொடியேற்றமும், பல்வேறு மொழிகளில் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அலங்கார திருத்தேர் பவனி வெள்ளிக்கிழமை இரவு நடைபெறுகிறது. கூட்டுத் திருப்பலி, மாதா மன்றாட்டு உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், இரவு சுமார் 7.30  மணிக்கு தேர் பவனி தொடங்குகிறது. பேராலய ஆண்டுப் பெருவிழா திருத்தேர் பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம் என்பதால், பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர் பவனியில் பங்கேற்பதற்காக திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்களால், வேளாங்கண்ணி பகுதி முழுவதும் களை கட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments